"'அப்பா' இறந்துட்டாரு.. 'இதான்' அவரோட கடைசி ஆச",.. "அத கேக்க நீங்க யாரு"??..,, 'போலீசாருடன்' வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் 'பரபரப்பு'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 70 வயது முதியவரான ராமசாமி என்பவர் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், ராமசாமியின் மகன் பாலகிருஷ்ணன் தனது தந்தையின் உடலை வீட்டிற்கு அருகேயுள்ள வெற்றிடத்தில் புதைக்க முடிவு செய்து குழி தோண்டியுள்ளார். இதற்கு அப்பகுதி கிராம மக்கள், உடலை வீட்டிற்கு அருகே புதைக்கக் கூடாது என்றும், மயானத்தில் தான் புதைக்க வேண்டும் எனக்கூறி அங்கே அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் தனது தந்தையின் உடலை வீட்டிற்குள்ளேயே எடுத்துச் சென்று  ஜீவசமாதி அடைந்தது போல, சடலத்தை அமர்ந்த நிலையில் வைத்து, சுற்றிலும் சுவர் போல் எழுப்பி, உடல் முழுவதும் திருநீர் பூசி அதனை மூடி விட்டார். இந்த தகவல், அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவ, உடனடியாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து பாலகிருஷ்ணனிடம் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.

ஆனால், அதற்கு மறுத்த ராமசாமி மகன், போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன் உடலை வீட்டிலேயே அடக்கம் செய்ய கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், என் வீட்டில் புதைக்கக் கூடாது என யார் சொல்வது என்றெல்லாம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ராமசாமியின் மகன் மற்றும் அவரது குழந்தைகளை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ராமசாமியின் உடலை சுற்றியிருந்த சுவரை உடைத்து விட்டு உடலை எடுத்து அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள், அங்கு வைத்து உடலை தகனம் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்