'அவங்க வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்காங்க...' 'கையில என்ன கெடச்சுதோ, எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிருக்கோம்...' புதுவித மது தயாரித்த கும்பல்... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் மதுவில் போதையை அதிகரிக்கும் பொருட்டு கையில் கிடைக்கும் கண்டப் பொருட்களை எல்லாம் சேர்த்து புதுவித மதுபானத்தை உருவாக்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி பகுதியில் சிலர் கும்பலாக நின்றுகொண்டிருந்தனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் இந்த கும்பல் வெளியே வந்து நிற்பதை கண்ட இருப்பதை கண்ட போலீசார் அவர்களை நோக்கி சென்றுள்ளனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தலைதெறிக்க ஓடியுள்ளனர். போலீசார் அவர்களை விடாமல் துரத்தி பிடித்து விசாரித்துள்ளனர். பிடிபட்ட அவர்கள் சிலைமலைபட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளரான ஆனந்தபாபு மற்றும் நரசிங்காபுரத்தை சேர்ந்த சக்திவேல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளனர்.
தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் மதுபானக்கடைகளையும் இழுத்து மூடியுள்ளது தமிழக அரசு. இதனால் விரக்தி அடையும் எங்களை போன்ற குடிமகன்களுக்கு உதவும் வகையில் நாங்கள் மதுபானங்களை தயாரித்து வருகிறோம் எனக் கூறியுள்ளனர். அவர்கள் இருந்த இடத்தில் ஏராளமான காலி மதுபாட்டில்கள் இருந்துள்ளது மேலும் பிளாஸ்டிக் ட்ரம்மில் மதுபானம் நிரப்பப்பட்டு இருந்தது.
அதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே விற்கும் மதுவுடன் கூடுதல் போதை ஏற்றும் வகையில் கள்ளச்சாரயம் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை சேர்த்துள்ளதாக போலீசாரிடம் உண்மையை கூறியுள்ளனர். அவர்கள் என்னென்ன பொருட்களை சேர்த்தனர் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிந்து கைது செய்யப்பட்ட இவர்கள் நால்வரையும் உடனடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார் மேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்