ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிந்த மக்கள்.. தண்ணீரை பீய்ச்சி விரட்டிய அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த மக்கள் மீது தண்ணீரை பீய்ச்சி சுகாதார ஊழியர்கள் விரட்டினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 18 பேர் வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மக்களை வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிந்த மக்கள் மீது சுகாதார ஊழியர்கள் தண்ணீரை பீச்சியடித்து விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

VIRUDHUNAGAR, CURFEW, PEOPLE, CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்