தக்காளி..! கூகுளுக்கே கோபம் வர்ற மாதிரி Search பண்றாங்கப்பா நம்ம ஆளுங்க.. என்னன்னு நீங்களே பாருங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தக்காளி..! கூகுளுக்கே கோபம் வர்ற மாதிரி Search பண்றாங்கப்பா நம்ம ஆளுங்க.. என்னன்னு நீங்களே பாருங்க..!
Advertising
>
Advertising

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை ரூ.100-ஐ கடந்து சென்று கொண்டுள்ளது.

People search in google to make food recipe without tomato

கடந்த மாதம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகி வந்த 1 கிலோ தக்காளி, தற்போது ரூ.150-ஐ நெருங்கியுள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காற்கறி வரத்து மழை காரணமாக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலை குறைய தொடங்கினாலும், தக்காளியின் விலை மட்டும் உயர்ந்த வண்ணம் உள்ளது.

People search in google to make food recipe without tomato

பல வீடுகளில் தக்காளியை சிக்கனமாக பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் பலரும் தக்காளி இல்லாமல் குழம்பு, சட்னி செய்வது எப்படி என்று கூகுளில் தேடி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த போட்டோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

TOMATO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்