'தண்ணி அடிக்க தண்ணிக்குள் நீச்சல்...' 'சாராயத்துக்காக மதுப்பிரியர்கள்...' எடுக்கும் ஹெவி ரிஸ்க்... !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதும் மது விலையை ஏற்றியதால் சாராயம் பக்கம் திரும்பிய மதுபிரியர்கள் சாராயத்தை வாங்க கடலூர் மாவட்ட மக்கள் அரை கி.மீட்டர் தூரம் நீந்திச் செல்வதால் ஆற்று நீரால் அவர்களின் உயிருக்கு  ஆபத்து ஏற்படும் என பலர் புலம்பி வருகின்றனர்.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் பாதி நாட்கள் வரை தமிழகத்தில் மது கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழக அரசு அதிரடியாக சில நாட்களுக்கு முன் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல் மதுபான விலையையும் ஏற்றியது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட மதுபிரியர்கள் மதுபானத்தின் விலை எகிறியதால் சாராயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சுமார் 143 மதுபானக் கடைகள் இருந்தாலும், இவர்கள் சாராயம் வாங்க தென்பெண்ணை ஆறு மறுபுறம் வந்தே  தீரவேண்டும்.

சுமார் அரை கிலோமீட்டர் கடலூரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றை நீந்தி மறுபுறம் வந்து புதுவையில் சாராயத்தை வாங்கி குடித்து விட்டு மீண்டும் ஆற்றிலே நீந்தி வீடு திரும்புகின்றனர்.

போதையை விரும்பும் இவர்கள் செய்யும் இந்த செயல்கள் அவர்களின் உயிருக்கு கண்டிப்பாக ஆபத்தை ஏற்படுத்தும் என சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர். மேலும் ஆற்றின் ஒரே இடத்தில் கரையைக் கடக்காமல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மது குடிப்பவர்கள் நீந்திச் செல்வதால் காவல்துறைக்குக் கண்காணிப்பு பணியில் சவால் ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்