'அண்ணே, இந்த ஒன் மீட்டர் டிஸ்டன்ஸ்' ... அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு ... பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்ற மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவையையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மதுபானக்கடை ஒன்றில் ஆண்கள் திரளாக நின்று பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. பொது இடங்களில் அதிகமாக மக்கள் கூட வேண்டாம் என்றும், ஒருவரை ஒருவர் தொட வேண்டாம் எனவும் மருத்துவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இதனைப் பொருட்படுத்தாமல் இந்திய மக்கள் பல இடங்களில் ஒன்றாக கூடியும், திரிந்தும் வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள் ஒன்றாக பொதுவெளிகளில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. மக்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான மளிகை மற்றும் காய்கறி கடைகள், வங்கிகள் போன்றவை மட்டுமே செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மதுக்கடைகள் அனைத்தும் அடுத்த ஒரு வாரம் செயல்படாது என்பதால் மது பிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மதுக்கடை ஒன்றின் முன் திரளாக கூடியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்ததை காற்றில் பறக்க விட்டு கூட்டமாக வரிசையில் நின்று பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக பேருந்துக்கு காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!
- சென்னையில் பரபரப்பு!... கொரோனா சிகிச்சை வார்டில்... 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்ய ஏற்பாடு!... என்ன காரணம்?
- ‘சென்னையில்’ மேலும் ‘3 பேருக்கு’ கொரோனா... ‘பாதிக்கப்பட்டவர்கள்’ எந்தெந்த ‘பகுதிகளை’ சேர்ந்தவர்கள் என ‘அமைச்சர்’ தகவல்...
- 113 பேருடன் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானம்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி..!
- 'கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று மாலை முதலே பேருந்து சேவை நிறுத்தம்!' - ஊரடங்கு உத்தரவு எதிரொலி!
- "மாப்ள அரைப்பாடி லாரியை புடிச்சாவது ஊரு வந்து சேரு..." "அதான் நேத்தே கைத்தட்டி கொரோனாவ விரட்டியாச்சே..." 'கோயம்பேட்டில்' குவிந்த 'திருவிழாக் 'கூட்டம்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?
- 'தங்கத்தை பேப்பர்ல பாருங்க'... 'நியூஸ்ல பாருங்க'... ஆனா 'வாங்கனும்னு' ஆசைப் படாதிங்க...'31ம் தேதி' வரை... 'தமிழகம்' முழுவதும் 'நகைக்கடைகள்' மூடல்...
- BREAKING: கொரோனாவை தடுக்க 'தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு!'... பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?