“இ-பாஸ் ஈஸியாயிடுச்சுனு .. சென்னைக வர்றவங்க அதிகமாவாங்க! அப்படி வர்றவங்களுக்கு இதான் நடக்கும்!” - மாநகராட்சி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் கொரொனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கும், அதனைத் தொடர்ந்து மண்டலம் விட்டு மண்டலம் செல்பவர்கள் இ-பாஸ் பெற்று செல்லும் முறையும் கொண்டுவரப்பட்டது.
எனினும் சில தளர்வுகளுடன், ஊரடங்கும் இ-பாஸ் முறையும் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தானியங்கி இ-பாஸ் கிடைக்கப் பெறுவதற்கான வழிவகையை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இதனை அடுத்து, இனி வருங்காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகும் அடுத்த நாளில் சுமார் 1.2 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும்(ஆகஸ்ட் 19) 18,853 இ-பாஸ் கோரிக்கைகள் பெறப்பட்டு அதில் 18,823 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்
நிகழ்ந்தது.
இதில் பேசிய ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த அனுமதி (E.Pass) எளிமையாக்கப்பட்டு, உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதே சமயம், இ-பாஸ் பெற்று சென்னை வரும் நபர்களை கண்காணித்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதற்கான பணிகளை தீவிரமாகக்க வேண்டும் என்றும் குறிப்பாக தொழிற்சாலை மற்றும் இதர அலுவலங்களின் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலுவலர்கள் சேகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை, இந்த அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை!
- “இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
- 'இறந்து போய்ட்டான்னு வந்து சொன்னாங்க...' 'இப்படி பண்ணாத'ன்னு தலையா அடிச்சுக்கிட்டோமே... - 3-வது மாடில விழுந்த சிறுவன்...!
- தளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்!'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்!
- 'வந்துட்டே இருக்காங்க...' 'இ-பாஸ் தளர்வான உடனே...' - சென்னையில் 'ஒரே நாளில்' வந்து குவிந்த பயணிகள்...!
- ‘இனி இ-பாஸ் ஈஸியா பெறலாம்!’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’! - தமிழக அரசு!
- 'சென்னையின் பிரதான ஏரியாக்களில்'... 'நாளை (18-08-2020) பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'..
- 'பாழடைஞ்சு கெடந்த வீட்ல கட்டுக்கட்டா பணம் நகை...' 'வீடு இருந்தும் 2 பாட்டிகளுக்கும் ரோட்ல தான் வாழ்க்கை...' - விஷயம் தெரிஞ்சு போலீசார் செய்த காரியம்...!
- 'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்!
- 'டிவிக்கு மேலே இருந்த செல்போன்'... 'செல்போன் ரிங்டோன் கேட்டதும் போனை எடுக்க ஓடிய குழந்தை'... சென்னையில் நடந்த கோர சம்பவம்!