‘துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள்’... ‘அடையாளமாக கைகளில் சீல்’... ‘வீட்டில் தனிமைப்படுத்தும் விதமாக நடவடிக்கை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

துபாயில் இருந்து மதுரை வந்த 155 பயணிகளின் கைகளில், கொரோனா தனிமைப்படுத்தலுக்கான சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாடு முழுவதுமே கடந்த 2 வாரத்திற்கு முன் வரை, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகளில், கொரோனா நோய் அறிகுறி இருந்தவர்களை மட்டுமே சுகாதாரத்துறையினர் விமானநிலையங்களில் பரிசோதனை செய்தனர். அறிகுறியில்லாதவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்து கண்காணித்தனர். இந்த முறையை பின்பற்றிய ஐரோப்பா நாடுகளில் தற்போது ‘கொரோனா’ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, தற்போது வெளிநாடுகளில் இருந்து வருகிற அனைத்து பயணிகளையும், அறிகுறி இருக்கிறதோ, இல்லையோ அனைவரையும் ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய, மாநில சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், 15 முதல் 28 நாட்கள் வரை கண்காணிப்பு வளையத்தில் வைப்பதற்கு ஏதுவாக, துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் இரண்டு குழந்தைகள் உள்பட 155 பேருக்கு கைகளில் சீல் வைக்கப்பட்டு,  உறுதிமொழி பத்திரமும் வாங்கிக் கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 17 வரை வீட்டில் தனிமையில் இருப்பேன் என்ற வாசகத்துடன் ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மருத்துவ முகாமில் தங்க வைப்பதற்கு சம்மதிக்காததை அடுத்து பயணிகள் கையில் சீல் வைக்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்