'வர ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை'... 'கவலப்படாதீங்க தங்கம் வாங்க வழி இருக்கு'... நகைக்கடைகளின் அதிரடி ஐடியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு காரணமாக நகைக் கடைகள் மூடி இருந்தாலும் அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்கலாம் என முன்னணி நகை கடைகள் அறிவித்துள்ளன.
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை, ‘அட்சய திருதியை’ என்று குறிப்பிடுவார்கள். அந்த அட்சய திருதியை வருகிற 26.4.2020 (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. அன்றைய தினத்தில் சிறிய அளவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது நல்லது மற்றும் தங்கம் மேலும் அபிவிருத்தியாக வழிவகுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
மேலும் அத்தியாவசிய கடைகளை தவிர நகைக்கடைகள் உள்பட பல்வேறு வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் அட்சய திருதியை அன்று ''ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கும் வசதியை பெரும்பாலான நகைக் கடைகள் அறிவித்துள்ளன''. இதையொட்டி பல நகைக்கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் இதற்கான அறிவிப்பை அனுப்பியுள்ளன.
சென்னையின் முன்னணி நகைக் கடை ஒன்று தனது வாடிக்கையாளருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், ''வருகின்ற அட்சய திருதியை உங்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்க வாழ்த்துகிறோம். எங்கள் நகைக்கடையில் ஆன்லைன் மூலம் நீங்கள் பரிசுக் கூப்பன்களை வாங்கலாம். லாக் டவுன் முடிந்த பின்னர் இந்த பரிசுக்கூப்பனை பயன்படுத்தி தங்க நகைகள், தங்க காசுகள் வாங்கலாம். இதற்கு வாட் வரியில் இருந்து சலுகையும், பிற கவர்ச்சிகரமான பரிசுகளும் உண்டு”. இவ்வாறு அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனியையே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க பல வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக நகை கடை உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடந்த 'ஜனவரியிலேயே' வாங்கி 'பதுக்கி விட்டது சீனா...' தேவையைவிட '18 மடங்கு' வாங்கிக் 'குவித்தது'... 'இப்போது சீனா வைப்பது தான் விலை...'
- ''இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை...'' ''உயிரிழப்புகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது...'' 'போற்றிய நாடே தூற்றிய அவலம்...'
- தமிழகத்தில் இந்த ‘ஒரு’ மாவட்டத்துல மட்டும்தான் இதுவரை யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை..!
- என்ன கொடுமை! மத்த நாடுகள்ல இருந்து 'கொரோனா' பரவுதாம்... 'அதிரடி'யில் இறங்கிய சீனா!
- 'அடுத்து' காத்திருக்கும் 'பேராபத்து'... 'ஆய்வுக்குழு' வெளியிட்டுள்ள தகவலால்... 'கலக்கத்தில்' உள்ள நாடு...
- கொரோனாவை 'காரணம்' காட்டி... 'இந்த' விஷயத்தில் ஏதாவது திட்டமிட்டால்... 'சீனாவுக்கு' கடும் 'எச்சரிக்கை' விடுத்துள்ள அதிபர் 'ட்ரம்ப்'...
- உங்க 'சகவாசமே' வேணாம்... 'அந்த' நாட்டிலிருந்து 'மொத்தமாக' வெளியேறும் 1000 நிறுவனங்கள்?... 'இந்தியாவுக்கு' அடிக்கப்போகும் ராஜயோகம்!
- அவர்களை கடலிலேயே 'சுட்டு' வீழ்த்த உத்தரவிட்டுள்ளேன்... கொரோனாவுக்கு நடுவிலும் 'கொந்தளிக்கும்' டிரம்ப்... என்ன காரணம்?
- ‘சிக்னல் கிடைக்காததால்’... ‘வீட்டுக்கு வெளியே வந்து செல்ஃபோன் பேசிய இளைஞர்’... ‘சென்னையில் நடந்த கோரம்’!
- ஊரடங்கால் 'இந்தியாவில்' இப்படியொரு மாற்றமா?... 'நம்பமுடியாத' உண்மை... 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!