'சின்னத்தம்பி பரவால்ல'.. ‘எங்க படையப்பா’லாம் பயங்கரம்.. 'ஒரு காட்டு காட்டிய காட்டு யானை!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் உள்ள மூணாறு அருகே மலைப்பாதையில் குறுக்கிட்ட காட்டு யானை ஒன்று 1 மணி நேரத்துக்கு போக்குவரத்தை முடக்கி பிரபலமானது.

எனினும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என 13 பேரை தாக்கிக் கொன்றுள்ளதாகக் கூறப்படும் இந்த யானையின் பெயர் படையப்பா என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். படையப்பா வரும்போது யாரும் சாலைகளில் திரியவே மாட்டார்களாம். நீண்ட நாட்களாக குறைந்திருந்த படையப்பாவின் அட்டகாசம் கடந்த ஒருவாரகாலமாக கன்னிமலை நயமக்காட்டுப் பகுதிகளில் மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய் அன்று மூணாறு-மறையூர் சாலையில், வழியில் வரும் வாகனங்களை மறித்து நடுவில் நின்றுகொண்டு யாரையும் செல்ல முடியாமல் திணறடித்து பீதியில் ஆழ்த்தியது. படையப்பாவைப் பொருத்தவரை வனத்துறையினருக்கெல்லாம் பயப்பட மாட்டாதாம்.

அதுவே தனக்காகத் தோன்றிய பின், அவ்விடத்தை விட்டு அகன்றால்தான் உண்டாம். அதுகிட்ட பகைச்சுகிட்டு என்ன செய்ய முடியும்? என்று புலம்பும் அப்பகுதி வாகன ஓட்டிகள் பலர் அவ்வழியில் செல்லவேண்டுமென்றால் தெறித்து ஓடுகிறார்கள். முன்னதாக சின்னதம்பி ஆனைமலைக் காட்டுப் பகுதிகளில் இப்படி சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் சின்னதம்பிக்கு மக்களிடத்தில் இருந்து வந்த நன்னடத்தை சான்றிதழ் படையப்பாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ELEPHANT, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்