பிசிஆர் ‘நெகட்டீவ்’னு வந்தா கொரோனா ‘இல்லை’னு அர்த்தமில்லை.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்றை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் என வந்தாலும் கொரோனா இல்லை என அர்த்தமில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்து கொரோனா அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் மூலம் தொற்றை உறுதி செய்யப்படுகிறது. பிசிஆர் பரிசோதனை சரியாக செய்தால் மட்டுமே தொற்றை உறுதி செய்ய முடியும். பிசிஆர் பரிசோதனையின்போது 10 விநாடிகள் மூக்கினுள் அந்த குச்சி இருக்கவேண்டும். மாதிரி எடுக்கப்படுவதற்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தினால்தான் சரியாக மாதிரி எடுக்கப்பட்டதாக அர்த்தம் என்றும், சில நேரங்களில் மாதிரிகளை ஆய்வகத்துக்கு சரியாக முறையில் கொண்டு செல்லாவிட்டால் நெகட்டிவ் என காட்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சளி, இருமல் தொந்தரவு இருப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு முன்பே சிடி ஸ்கேன் செய்துகொள்ளலாம் என்றும், 10 நிமிடங்களில் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என தெரிந்துகொள்ளலாம் என்றும் நுரையீரல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் சரியாகவே எடுத்தாலும் 70% பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் என வரும். அதனால் சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம். மற்ற நுரையீரல் பாதிப்புக்கும், கொரோனா பாதிப்புக்கும் சிடி ஸ்கேனில் வித்தியாசம் தெரியும். இதை வைத்து சிகிச்சையை தொடங்கலாம். இதனால் கொரோனா நெகட்டிவ் என்றால் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என மற்றொரு நுரையீரல் நிபுணரான மருத்துவர் அனந்த சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த வகையான நோயாளிகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகமாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'குறைஞ்ச விலையில கொரோனா டெஸ்ட் பண்ணிக்கலாம்!'.. புழக்கத்துக்கு வரும் புதிய கருவி இதுதான்!
- 'சென்னை மக்களே இவரை நியாபகம் இருக்கா'... '30 வருசமா யாராலும் சிரிக்க வைக்க முடியல'... சிலை மனிதரின் வாழ்க்கையில் வந்த பெரும் சோதனை!
- கோவையில் மேலும் 568 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 60 பேர் கொரோனாவுக்கு பலி!.. தடுமாறும் சென்னை!.. முழு விவரம் உள்ளே
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'கொரோனா காலத்தில் சிறப்பான சிகிச்சை...' - ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு விருது...!
- 'எப்போக்குள்ள எல்லாருக்கும் தடுப்பூசி கிடைக்கும்?'... 'அப்ரூவ் ஆன 24 மணி நேரத்துல'... 'அதிபர் டிரம்ப் நம்பிக்கை தகவல்!'...
- 'சீன ஆய்வகத்திலிருந்து'... 'புதிதாக பரவியுள்ள பாக்டீரியா நோய்'... 'பாதிப்பு எண்ணிக்கை கவலை அளிப்பதாக'... 'சீன பத்திரிகை செய்தி!'...
- 'கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து'... 'பார்மசிகளில் அடுத்த வாரம் முதல் விற்பனை'... 'அதிரடி காட்டும் நாடு!'...
- '6,000 பேருக்கு வேலை, 60,000 பேருக்கு டிரெய்னிங்'... 'அதுவும் எங்க தெரியுமா?'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல குழுமம்!'...