ஹெல்மெட் போட்ருந்தா சாக்லேட்.. இல்லைன்னா இத பண்ணுங்க.. SP எடுத்த அதிரடி நடவடிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழனியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்ற பயணிகளுக்கு நூதன தண்டனை அளித்துள்ளார் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன்.

Advertising
>
Advertising

Also Read | 10 வருஷத்துக்கு ஒருமுறை தான் பூக்கும் ... ஆனா Smell சடலத்தை போல துர்நாற்றமா?.. வைரல் ஆகும் நூதன கார்பஸ் பூ.!

விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு முகாம் ஒன்றினை நடத்தினர். பழனியின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே ஹெல்மெட் அணிந்தபடி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு சீனிவாசன் சாக்லேட்களை வழங்கினார். மேலும் ஏன் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அவர் எடுத்துரைத்தார். ஹெல்மெட்டின் அவசியம் குறித்த நோட்டீஸ்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு வினோத தண்டனை ஒன்றினையும் அளித்தார்.

தண்டனை

காவல்துறையின் விழிப்புணர்வு முகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் சென்ற நபர்களை திருக்குறள் எழுதச்சொல்லியும் 'இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன்' என நூறு முறையும் எழுத வைத்திருக்கிறார் இந்த அதிரடி அதிகாரி. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கேரளாவில்

சமீபத்தில் கேரளாவில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இதுபோல ஹெல்மெட் அணியாமல் பயணித்த வாகன ஓட்டிகளை இம்போசிஷன் எழுத வைத்துள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்ய அப்போது பேசிய நீதிபதிகள் "இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து தான் வாகனங்களை ஓட்ட வேண்டும். அதை மீறி, தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக, நான் இனிமேல் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்ட மாட்டேன் என்றும், மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்ட மாட்டேன் என்றும் பன்முறை எழுதச் சொல்லி தண்டனை அளிப்பதில் தவறில்லை. மேலும் இதுபோன்ற செயல்கள் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டிய நபர்களுக்கு அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடுத்த நூதன தண்டனை குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

PAZHANI, PAZHANI SP, WEARING HELMETS, ஹெல்மெட், பழனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்