கம்பளியால் சுற்றியிருந்த சடலம்.. இறந்தவர் உடலுடன் இறங்கிய இளைஞர்கள்.. திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் ரயில் நிலையத்தில் கம்பளி போர்த்திய படி ஆண் சடலத்துடன் பயணிகள் சிலர் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வாரம் ஒருமுறை சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரயில் நேற்று திருப்பூருக்கு வந்தது.  அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ரயிலில் இருந்து இறங்கியுள்ளனர். அவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கம்பளி போர்த்தியபடி நபர் ஒருவரை தூக்கி வந்துள்ளனர் . இதை சிசிடிவி கேமராவில் பார்த்த ரயில்வே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் பெயர் அர்பிந்த்ராய் (வயது 30) என்பதும் அவர் பெங்களூருவில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அர்பிந்த்ராய் சில்சாரிலிருந்து ஜோலார்பேட்டை வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். அதனால் ஜோலார்பேட்டை நிறுத்தம் வந்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்பியுள்ளனர்.

ஆனால், அர்பிந்த்ராய் உயிரிழந்து சடலமாக  கிடந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரின் செல்போன் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சடலத்தை திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கும்படியும், தாங்கள் வந்து எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அந்த இளைஞர்கள் அர்பிந்த்ராயின் சடலத்தை எடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கம்பளியால் போர்த்தி சடலத்தைக் கொண்டு வந்த சம்பவத்தால் திருப்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

TIRUPPUR, RAILWAYSTATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்