சென்னை மெட்ரோவில் நாளைமுதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை..முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பயணிகள் நாளை முதல் (ஜூன் 7) கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிவித்துள்ளது.

Advertising
>
Advertising

கொரோனா

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ், உலகெங்கிலும் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களிலேயே உலக நாடுகள் முழுவதும் பரவிய இந்த வைரஸ், லட்சக்கணக்கான உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்தது. இதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பல முன்னணி நிறுவனங்கள் உருவாக்கின. இவை புழக்கத்திற்கு வந்த பின்னர் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. ஆகவே, உலக நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டு மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

முகக் கவசம்

இந்நிலையில், சமீப வாரங்களாக சென்னையில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் தவறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து சென்னை மெட்ரோ நிர்வாகமும் பயணிகள் அனைவரும் நாளை முதல் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் நாளை முதல் (ஜூன் 7) முகக் கவசம் அணிய வேண்டும். அதேபோல மெட்ரோ நிலையங்களுக்கு வந்துசெல்லும் நபர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி

மேலும், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

METRO, CHENNAI, MASK, மெட்ரோ, சென்னை, முகக்கவசம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்