செருப்பு, சேமியாவுல வைக்கிற விஷயமாயா அது.. சென்னை ஏர்போர்ட்டை அதிர வைத்த நபர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertising
>
Advertising

இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் 6 பேர் குழுவாக வந்துள்ளனர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் இந்த 6 பயணிகளையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்களில் இருவர் அணிந்திருந்த காலணிகளை பரிசோதித்துப் பார்த்தபோது, தங்க பசை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற 4 பயணிகள் தங்களது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து தங்கக்கட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 45 லட்ச ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த 8-ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் கொண்டு வந்த சேமியா பாக்கெட்டுக்குள் சவுதி ரியால் (Saudi Riyal) பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 19 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

CHENNAIAIRPORT, GOLDSMUGGLING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்