கொஞ்சம் உங்க பையை காட்டுங்க.. என்ன அது பேப்பர்ல சுத்தியிருக்கீங்க..? போலீசாரை அதிர வைத்த பயணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசுப் பேருந்தில் பயணம் செய்த நபரிடம் சோதனை நடத்தியதில் அவரது பையில் கட்டுகட்டாக பணம் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
>
Advertising

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வர உள்ளதால் தமிழ்நாடு-கேரள எல்லையில் இரு மாநில போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் இரு மாநில மதுவிலக்கு காவல்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள மாநில அரசுப் பேருந்தை போலீசார் சோதனையிட்டனர். பேருந்துக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நபர் ஒருவர் பையுடன் அமர்ந்திருந்தார். உடனே அவரது பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் காகிதத்தால் சுற்றப்பட்டு கட்டுகட்டாக பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த ஆதம் என்பது தெரியவந்துள்ளது. அவர் கொண்டுவந்த பையில் சுமார் 70 லட்சம் ரூபாய் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் சாதாரண பயணி போல அமர்ந்திருந்த நபரின் பையில் கட்டுகட்டாக பணம் இந்த சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KERALA, MONEY, TAMILNADUPOLICE, POLICE, KANYAKUMARI, PASSENGER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்