“வன்மையா கண்டிக்கிறேன்!!”.. வெளுத்து வாங்கிய துணை முதல்வர் ‘ஓபிஎஸ்!’.. தெறிக்கும் ட்விட்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம் தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை

எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்