‘சட்டத்துல இடம் இருக்கா இல்லயா?’.. கார் முன்னாடி கட்சிக்கொடி.. போக்குவரத்துத் துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசியல்வாதிகள் தத்தம் கார்களில், கட்சிகளின் கொடிகளை முன்புறமாக கட்டிக்கொள்வது சரிதானா? என்பது பற்றிய முக்கிய அறிவிப்பினை அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

அதிகாரச் சுவை, பற்று என்கிற இரண்டும் ஒன்றுக்கொன்று அக்கம் பக்கத்தினர் போன்றவை. அதிலும் அதிகாரம்  என்பது ஒரு வேலி. தத்துவ ஆசான்களின் கூற்றுப்படி அதிக பயம் கொண்ட ஜூவராசிகள் தங்களுக்குத் தாங்களே அதிகாரத்தை தோற்றம், சிறப்பு சப்தம், நடை, உடை, பாவனைகள் மூலமாக ஏற்படுத்திக்கொள்வன. இவற்றால் எதிர் வருபவர் நம்மை பார்த்து அஞ்சவோ, நம்மிடம் வம்பு வைத்துக்கொள்ளும் எண்ணத்தை கைவிடவோச் செய்வர்.

ஆனால் அதிகாரத்தை விரும்பாதவர்கள் கூட விரும்பியோ விரும்பாமலோ, தாங்கள் பலரின் ஈகோக்களுக்கு வெட்டுக்கொடுத்துவிடாமல் இருக்க அதிகார வேலியை அமைத்துக்கொள்வதுண்டு. ஆனால் பற்று காரணமாக, அதாவது ஒன்றின் மீதுள்ள தீவிர பிடிப்பின் காரணமாக அதையே தம்மிடத்தில் வைத்துக்கொள்வது வேறு ஒருவகை.

இதில் தேசியக் கொடியை நெஞ்சில் குத்திக் கொள்பவர்களும், தம்முடைய தலைவராக இருக்கும் ஒரு அரசியல்வாதியின் புகைப்படத்தை தனது வெள்ளைச் சட்டை பாக்கெட்டில், மற்றவருக்கும் எளிமையாக தெரியும்படி வைத்துக் கொள்பவர்களும் வித்தியாசப்படுகின்றனர். சிக்னலில் நிற்காமல் போவது தொடங்கி, பல விதமான சவுகரியங்களுக்கு இந்த அதிகாரங்களை துஷ் பிரயோகம் செய்துகொள்பவர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் உண்மையில் அரசியல்வாதிகள் தங்களது வாகனத்தில் தத்தம் கட்சிக்கொடிகளை முன்பக்கம் கட்டிக்கொண்டு பறக்கவிடுவது என்பது சட்டத்திலேயே இல்லை என்று அரசு போக்குவரத்துத் துறை கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

TRANSPORT, POLTICIANS

மற்ற செய்திகள்