'வாய் பேச முடியாத தந்தை'... 'வயதான தாயை பார்த்துக் கொள்ள'... 'கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற'... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டுக் கடன் மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் கடலில் தவறி விழுந்து காணாமல் போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சூரங்காட்டு வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பூமி பாலகன். மீன் பிடி கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாத நோயினால் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்ததுடன் வாய் பேச முடியாமலும் போனது. பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தும் மீனவர் பூமி பாலகன் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால், அவரால் மீன் பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில், குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், மருத்துவச் செலவிற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காகவும், பூமி பாலகனின் மூத்த மகன் மோகன்ராம் (29), மீன்பிடிக் கூலியாக மங்களூரில் மீன் பிடிக்கச் சென்றார்.

கடந்த 10-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மோகன்ராம், 13-ம் தேதி இரவு மீன்பிடிப்பதற்காகப் படகில் சென்ற போது கடலில் தவறி விழுந்தார். இதனால் பதறிப்போன படகில் சென்ற மற்ற மீனவர்கள், கடலில் விழுந்த மோகன்ராமைத் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் இருநாள்களுக்குப் பின் கரை திரும்பிய அவர்கள் இது குறித்து மங்களூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இத்தகவல் மோகன்ராமின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கடலுக்குச் சென்ற மகன் காணாமல் போன தகவல் பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்தது.

கடலில் விழுந்த மகன், தற்போது வரை மகன் வீடு திரும்பாததால், பெற்றோர் கதிகலங்கி போயுள்ளனர். இதையடுத்து, மகனின் நிலை குறித்து அறிய முடியாமலும், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையிலும் வறுமையான சூழலில் தவித்து வரும் பூமிபாலகன் - விஜயலட்சுமி தம்பதியர், தங்கள் மகனின் நிலை குறித்து அறிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மகன் எப்போது வருவான் என காத்திருக்கும் பெற்றோரை நினைத்து அப்பகுதி மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.

PARENTS, SON, ELDER, MANGALORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்