'இனிமேல் இந்த காரணத்தை சொல்லி பெற்றோர்கள் தப்பிக்க முடியாது'... வரதட்சணை தொடர்பான வழக்கில் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தையைப் பொறுப்புள்ள குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கடலூர் மகளிர் நீதிமன்றம், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த பெற்றோர், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரியிருந்தனர்.
அந்த மனுவில், ''எங்கள் மகனுக்குத் திருமணமான நாளிலிருந்து நாங்கள் தனியாகத்தான் இருந்து வந்ததாகவும், மருமகளின் தற்கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும் மருமகளைத் துன்புறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். ஒருபுறம் மகனுடன் வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளைப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மகன் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் வசிக்கவில்லை எனக்கூறி, பெற்றோர்கள் தப்பித்துக் கொள்வது இந்த சமூகத்திற்குத் தவறான தகவலைக் கொண்டு செல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது, இருப்பிடம் தருவது, வளர்ப்பது மற்றும் நல்ல கல்வியை வழங்குவது, நல்ல வேலையைப் பெற தங்கள் குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல, பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமைதான் எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்ல பிரண்ட்ஸா தான் இருந்தோம்'... 'போக போக காதலா மாறிடிச்சு'... 'சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்கள்'... அதிரடி உத்தரவு!
- 'லிப்ட் இல்லாம மாடி ஏறி வரோம்'... 'அந்த காசையும் எடுத்துக்குறாங்க'... 'அதையும் தாண்டி டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்'?... உயர் நீதிமன்றம் அதிரடி!
- 'உயருகிறதா சினிமா டிக்கெட் கட்டணம்'?... 'மதுரை ஐகோர்ட்' கிளை அதிரடி உத்தரவு !
- திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!
- இணையம் மூலம்... சட்ட விரோதமாக பார்ப்பவர்களுக்கு செம்ம செக்!.. மாஸ்டர் திரைப்படம் விவகாரத்தில்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
- விஜய்யின் 'மாஸ்டர்' படம் வெளியாகவிருக்கும் நிலையில்... திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
- தியேட்டர்களில் 100% அனுமதி விவகாரம்.. ‘தடை’ கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
- 'சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை வழக்கு'... 'உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு'... வெளியான முழு தீர்ப்பின் விவரம்!
- 'இந்த' கல்லூரிகளை எல்லாம் திறக்க வேண்டாம்!.. உயர்நீதிமன்றம் அதிரடி!.. என்ன நடந்தது?
- ‘அரியர் தேர்வு ரத்து வழக்கு’.. வீடியோ கான்ஃபரன்சிங்கில் குவிந்த மாணவர்கள்.. சேட் பாக்ஸில் வந்த ‘மெசேஜ்’.. கடுப்பான நீதிபதிகள்..!