தமிழகத்தில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு உறுதியான கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மக்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அவரது மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்