உயிரிழந்த தந்தை.. மனசுல வேதனை.. ஆனாலும் தளராமல் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. கல்விக் கனவுக்காக நெகிழ வைத்த மாணவி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தற்போது, தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சோகமாக தேர்வு எழுத வந்த மாணவியும், அதற்கு பின்னால் உள்ள அதிர்ச்சி காரணமும், பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது.

Advertising
>
Advertising

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப்பட்டினம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் இரவிச்சந்திரன் (வயது 48).

இவரது மகள் சுரேகா. பரமக்குடி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறாரா சுரேகா.

தந்தைக்கு நேர்ந்த சோகம்

இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இரவிச்சந்திரன், திடீரென உயிரிழந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு பக்கம், அதே நாளில் சுரேகாவுக்கு வணிகவியல் பாடத்திற்கான பொதுத் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், தந்தைக்கு நேர்ந்த நிலையைக் கண்டு, மகள் சுரேகா கடும் வேதனை அடைந்தார்.

வேதனையில் இருந்த மாணவி

இருந்த போதும், நன்றாக படித்து, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி, அதனை நிறைவேற்றும் பொருட்டு, கலங்கிய மனதுடன் உறவினர் ஒருவருடன், தேர்வு எழுத பள்ளிக்கு வந்துள்ளார் சுரேகா.

பள்ளி வளாகம் வந்த சுரேகா, மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். அவரை சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறி தேற்றினார். தேர்வை முடித்து விட்டு, தந்தையின் இறுதி சடங்கிற்கு சென்றார் சுரேகா.

இது தொடர்பான செய்தி தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், சுரேகாவின் நிலையை எண்ணி, பலரது மனமும் கலங்கிப் போயுள்ளது. மாணவியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தும், அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

PLUS 2 EXAM, PUBLIC EXAM, FATHER, DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்