எதுக்கு இப்படி டான்ஸ் ஆடுற? மணமகளை கன்னத்தில் அறைந்த மணமகன்.. திருமண விழாவில் பெண்ணின் அப்பா எடுத்த அதிரடி முடிவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர்: பண்ருட்டி அருகே திருமண வரவேற்பின்போது மணமகள் நடனமாடியதை விரும்பாத மணமகன், அவரை அறைந்ததால், மணமகள் தனது முறை மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.

Advertising
>
Advertising

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

வாக்குவாதம்:

இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெண் அழைப்பு நடைபெற்றபோது, மணப்பெண், தனது உறவினர்களுடன் நடனமாடிக் கொண்டு, மண்டபத்திற்கு வந்துள்ளார். இதை விரும்பாத மணமகன், மணமகளிடம் சென்று 'ஏன் இப்படி பண்ற?' எனக் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மணமகளைக் கன்னத்தில் அறைய, அவரும் பதிலுக்கு அறைந்துள்ளார்.

என் மகளை எப்படி அடிக்கலாம்?

இதை பார்த்த மணமகளின் தந்தை, திருமணத்திற்கு முன்னரே என் மகளை எப்படி கைநீட்டி அடிக்கலாம் எனக் கூறி சண்டை போட்டார். அதன்பிறகு, ‘உனக்கு என்னுடைய மகளைத் திருமணம் செய்துகொடுக்க விருப்பமில்லை. எனவே மண்டபத்தை விட்டு வெளியே போ’ என்று கூறியுள்ளார். மணமகளும் இதையே கூறியுள்ளார். இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட மணமகன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

முறை மாப்பிள்ளையுடன் திருமணம்:

இதனையடுத்து மணமகளின் தந்தை, உறவினர்களுடன் கலந்து பேசி, செஞ்சியைச் சேர்ந்த முறை மாப்பிள்ளையுடன், நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை பண்ருட்டி திருவதிகை கோயிலில் முறை மாப்பிள்ளையுடன் மணப்பெண்ணுக்குத் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

சமீபமாக திருமண கொண்டாட்டங்களில், மணப்பெண்கள் நடனமாடுவது வழக்கமாகி வருவதும், அதுபோன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை அறிந்த புதிய தலைமுறையினர் அதில் ஈடுபாடு கொண்டு, நவீன காலத்திற்கேற்ப மாறிவருகிறார்கள்.

இது எங்கும் நடப்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் என நம்முடைய கலாச்சாரம் அனைத்துமே முன்னோக்கி நகர்கிறது. திருமணத்தில் நடனம் ஆடியதினால் அந்த திருமணமே நின்று இந்த அளவிற்கு போயுள்ளது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PANRUTI, WEDDING, BRIDE, GROOM, DANCE, மணமகன், நடனம், மணமகள், பண்ருட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்