‘இனி இவங்களுக்கும் 9 மாத விடுப்பு உண்டு’... 'தமிழக அரசு அதிரடி அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர்களுக்கு, மகப்பேறு கால விடுப்பை ஒன்பது மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பினை, அரசு பெண் ஊழியர்களுக்கு உள்ளது போன்று 180 நாள்களில் இருந்து 270 நாள்களாக உயர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளை வைத்துள்ள, கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விடுப்பினை மகப்பேறுக்குப் முன்போ அல்லது பின்போ எப்படி தேவைப்படுகிறதோ, அதுபோன்று எடுத்துக் கொள்ளலாம் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

GOVERNMENT, PANCHAYATSECRETARY, WOMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்