அய்யா நாங்க ‘கூலி’ வேலை செய்றோம்.. எங்களால முடியாது.. ‘லவ் மேரேஜ்’ செய்த ஜோடிக்கு ஊர் ‘பஞ்சாயத்தில்’ நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதல் திருமணம் செய்துகொண்ட இளம்தம்பதிக்கும் அவரது இரு குடும்பத்தாருக்கும் ஊர் பஞ்சாயத்தில் அபாராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கீழ்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜீவானந்தம். இவரும் சின்ன கொல்லகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் பவானியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த நாகராஜ், பவானிக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இது ஜீவானந்துக்கு தெரியவர உடனே அவசர அவசரமாக பவானியை திருமணம் செய்துள்ளார்.

இதனை அடுத்து ஊர் பஞ்சாயத்தார்கள் செல்வராஜ், கமல்க்கண்ணன், மற்றும் சண்முகம் ஆகியோர் காதல் திருமனம் செய்த ஜோடிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக தெரிகிறது. இதற்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் பெண் வீட்டாருக்கு 5 ஆயிரமும், மாப்பிள்ளை வீட்டாருக்கு 8 ஆயிரமும் அபராதம் விதித்துள்ளனர்.

இதுகுறித்த தெரிவித்த காதல் ஜோடி, நாங்கள் வட்டிக்கு 20,000 ரூபாய் வாங்கி பஞ்சாயத்தாரிடம் செலுத்தினோம். அதை வாங்கிக்கொண்ட அவர்கள் மீதமுள்ள பணத்தை ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினர். கூலி வேலை செய்யும் எங்களால் எப்படி அவ்வளவு பணத்தை உடனே கொடுக்க முடியும் என கேட்டோம். உடனே அவர்கள் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக கூறினர் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர்கள் இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கீழ்பள்ளிப்பட்டு ஊர் பஞ்சாயத்தார்கள் செல்வராஜ், கமலக்கண்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செல்வராஜ் மற்றும் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான சண்முகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்