'வர்ற ஞாயிற்றுக்கிழமை அலார்ட்டா இருங்க' ... 'பஸ்ல இருந்து எறங்குனதும் இத பண்ணுங்க' ... கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் லைக்ஸ்களை அள்ளும் ஊராட்சி தலைவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்திலுள்ள சித்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக பேருந்து நிலையங்களில் குழாய்கள் அமைத்து அறிவிப்பு பலகையை வைத்துள்ள சம்பவம் அங்குள்ள ஊர் மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பதற்கான நடவடிக்கையை தீவிரமாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சித்தனூர் பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா கொரோனா குறித்த விழிப்புணர்வை கிராம மக்களிடையே சிறப்பாக செய்து வருகிறார். சித்தனூர் பேருந்து நிலையத்தில் கைகழுவ குழாய்களை அமைத்துள்ளார். அங்குள்ள ஊர் மக்கள் வெளியூர்களுக்கு பேருந்தில் பயணம் செய்து திரும்பி வரும்போது குழாய்களை பயன்படுத்த வேண்டும் என ராஜா மக்களிடையே வலியுறுத்தி வருகிறார்.
மேலும் வரும் 22 ஆம் தேதி, பிரதமர் மோடி அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வலியுறுத்தி உள்ளதையும் தலைவர் ராஜா ஒவ்வொரு வீடாக சென்று கவனமாக இருக்க வேண்டி வலியுறுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஊர் மக்களிடையே ஊராட்சி மன்ற தலைவர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு புகைய போட்டு விட்டா கொரோனா காலி' ... 'இல்லைன்னா கூட்டம் ஒண்ண போட்றலாம்' ... கொரோனாவுக்கு மருந்து சொல்லும் 'மத' மருத்துவர்கள்!
- மூன்று மாதமாக அச்சுறுத்திய 'கொரோனா' ... இறுதியில் சீனாவிற்கு கிடைத்த சிறிய ஆறுதல்!
- ‘கொரோனா விடுமுறை’.. ஊட்டிக்கு டூர் போன கல்லூரி மாணவர்கள்.. பதபதைக்க வைத்த கோரவிபத்து..!
- இரண்டு வாரம் 'Work from home' ... வீட்ல 'ஜாலியா' இருக்கலாம் ... அப்போ இவங்களோட நிலைமை ?
- 'கொரோனா, யூ ஆர் வெரி டேஞ்சர்' ... 'ஓ, பாட்டாவே படிச்சிடீங்களா?' ... இளைஞர்கள் வெளியிட்ட 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு பாடல்!
- ‘கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் எடுத்த சோக முடிவு!’.. ‘விசாரணையில்’ வெளிச்சத்துக்கு வந்த ‘திடுக்’ உண்மைகள்!
- 'ராகுல் டிராவிட்ட பாலோ பண்ணுங்க' ... 'கொரோனால இருந்து விலகி இருங்க' ... கிரிக்கெட் ரசிகரின் மாஸ்டர் பிளான்!
- 'சொல்லி ஒரு நாள் கூட ஆகல' ... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே' ... சர்ச்சையை உருவாக்கிய ஜல்லிக்கட்டு போட்டி
- 'அதை' மட்டும் 'செஞ்சு' நிரூபிச்சிட்டீங்கனா... '1 கோடி' பரிசா தாறோம்... யாரு வேணாலும் 'களத்துல' குதிக்கலாம்!
- 'அவங்களுக்கு மட்டும் தான் லீவு' ... 'நீங்க ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்துருங்க' ... பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த முதன்மை 'கல்வி அலுவலர்'!