‘மூச்சுத் திணறல், காய்ச்சல் இருக்கா’... ‘பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட’... ‘பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் அச்சத்தால் மூச்சுத் திணறல், ஜலதோஷம், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகள் என பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூச்சுத் திணறல், ஜலதோஷம், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள், மலைக்கோயில், ரோப் கார், மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த் தடுப்பு முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால், திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட உலக பிரசித்திபெற்ற கோவில்களில் கொரோனா அறிகுறியுடன் இருக்கும் பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு கூறியுள்ளநிலையில், தற்போது பழனியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்ன நடந்தாலும் ஊருக்கு போக மாட்டேன்..’. ‘இது என் வாழ்கையில எடுத்த தைரியமான முடிவு...’ சீனாவில் தொடர்ந்து படிக்க விரும்பும் சிங்கப் பெண்...!
- 'என்ன நடந்தாலும், எப்போது நடந்தாலும்... 'இது' மட்டும் மாறாது... ஆனால்'... கொரோனாவுக்கு சவால் விடும் தேவசம் போர்டு!... சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி!
- ‘இத’ மட்டும் பண்ணினா ‘கடும்’ நடவடிக்கை... அதிகரித்து வரும் ‘கொரோனா’ பாதிப்பால்... ‘எச்சரித்துள்ள’ சுகாதாரத்துறை அமைச்சர்...
- வீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’!
- '28 நாட்களுக்கு கோயிலுக்கு வராதீங்க!'... சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் அதிரடி மாற்றங்கள்!... கொரோனா எதிரொலியால்... 'திருப்பதி தேவஸ்தானம்' தீவிரம்!
- ‘மனம் குளிர செய்யும் நற்செய்தி...’ ‘தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்தார்...’ சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்...!
- 'என்னோட சளி, காய்ச்சல் மத்தவங்களுக்கு பரவிருச்சுனா!?'... 'அதனால'... கொரோனா குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கையை... தந்திரமாக பயன்படுத்திய மாணவன்... தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தால் சென்னையில் பரபரப்பு!
- ‘கொரோனா பீதி’!.. ‘ஒரேநாளில் சரிந்த சென்செக்ஸ்’.. கீழே இறங்கிய அம்பானி.. மறுபடியும் முதலிடத்தை பிடித்த பிரபல தொழிலதிபர்..!
- “எனக்கு கொரோனா இல்ல.. அப்படி இருந்தாலும் தனியார் மருத்துவமனைதான் போவேன்!”.. தப்பியோடிய நபர்!
- 'சமுதாயத்துக்காக உழைக்கனும்னு நெனச்சது குத்தமா!?'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா!... நெஞ்சை உலுக்கும் சோகம்!