'விளக்கேத்துற வேலைய நாங்க பாத்துக்குறோம்' ... 'அதே மாதிரி நீங்களும் இவங்க பேச்ச கேளுங்க' ... பிரதமர் கருத்திற்கு ப. சிதம்பரம் பதில் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஊரடங்கை கடைபிடித்து வரும் நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணைத்து அனைவரின் வீடுகளிலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும் எனவும் இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரதமரின் இந்த பேச்சுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். 'பொருளாதார சரிவினால் சிக்கி தவிக்கும் தொழிலதிபர்கள் முதல் தினக்கூலி தொழிலாளர்களின் சரிவை மீட்க நீங்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம். ஏப்ரல் ஐந்தாம் தேதி விளக்கேற்றுவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக பிரதமரும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 22 ம் தேதி சுய ஊரடங்கை இந்திய மக்கள் கடைபிடித்த போது மக்கள் கைகளை தட்டி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

P. CHIDAMBARAM, NARENDRA MODI, LOCKDOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்