'கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இருக்கா?'... 'இல்லன்னா இந்த மாவட்டத்துக்கு வர முடியாது'... கலெக்டர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது.
கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமலிலிருந்தது. சமீபத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு நடைமுறையில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு அதிகம் பேர் வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, 'கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் மக்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பினாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த மாநிலத்தை ஒட்டி உள்ள நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மீண்டும் இ-பாஸ் கட்டாயம்’!.. ஆனா இந்த 3 மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
- “இ-பாஸ் ஈஸியாயிடுச்சுனு .. சென்னைக வர்றவங்க அதிகமாவாங்க! அப்படி வர்றவங்களுக்கு இதான் நடக்கும்!” - மாநகராட்சி அதிரடி!
- தளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்!'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்!
- 'வந்துட்டே இருக்காங்க...' 'இ-பாஸ் தளர்வான உடனே...' - சென்னையில் 'ஒரே நாளில்' வந்து குவிந்த பயணிகள்...!
- ‘இனி இ-பாஸ் ஈஸியா பெறலாம்!’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’! - தமிழக அரசு!
- “அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்!!”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா? - போலீஸ் சொல்வது என்ன?
- '4 மாவட்டங்கள் இடையே இ-பாஸ் கண்டிப்பா வேணும்...' 'யார் புதுசா இ-பாஸ் வாங்க வேண்டாம்...? - தமிழக அரசு அறிவிப்பு...!
- 'கேள்வி கேட்ட போலீஸ்... திடீரென தீக்குளித்த ஆட்டோ டிரைவர்...' - அதிர்ச்சி சம்பவம்!
- "சென்னை தொடர்பான இ-பாஸ் நிறுத்தப்படுகிறதா?".. தமிழக அரசு விளக்கம்! உள்தமிழகத்துக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. திருப்பி அனுப்பும் போலீஸார்!
- சென்னையில் 'இ-பாஸ் சேவை' நிறுத்தமா?... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா?...' 'நிலவரம் என்ன?...'