இந்த மாதிரி 'ஸ்டிக்கர்' ஒட்டியிருக்க... வண்டிகள பிடிச்சு உடனே 'அத' பண்ணிடுங்க...! - அதிரடி உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்களைப் போன்று ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது. சிலர் Human Rights, Police, Press, Lawyer போன்ற சொற்களை ஸ்டிக்கரைக் கொண்டு ஒட்டிக்கொண்டு ஓட்டி வருகின்றனர்.
வாகனச் சோதனையின்போது இவர்கள் காவல் துறையினருக்கு சரியான ஒத்துழைப்பை வழங்குவதில்லை. இதுபோன்ற ஸ்டிக்கர்கள் அல்லது போர்டுகள் வைத்து வரும் வாகனங்களை போலீசாரும் பெரிய அளவில் சோதனை எதுவும் செய்யாமல் விட்டு விடுகின்றனர்.
ஆனால்,இதுமாதிரியான ஸ்டிக்கர்களை தங்கள் வண்டிகளில் ஓட்டிக்கொண்டு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு வரும் வண்டிகளை தடுத்து நிறுத்தி, சோதனை செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,
‘அ’ அல்லது ‘G', Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer போன்ற ஸ்டிக்கர்கள் மற்றும் போர்டுகள் காணப்படும் வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் குறித்த உண்மையான விவரங்கள் இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், S.No., Date & Time, Vehicle Registration No., User name, Address, Cell No., Office address, Designation, From, To, Vahan app details ஆகியவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பிஅலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.' இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சார், இது 'No Parking'... 'தூக்கு என்னையும் சேத்து தூக்கு, சவால் விட்ட இளைஞர்'... 'இணையத்தில் வைரலான வீடியோ'... உண்மையில் நடந்தது என்ன?
- 'காவல்துறையில் கம்பீரமாக பணிபுரிந்த ஆப்கான் பெண்!.. வேலைக்கு போன குற்றத்திற்காக... ஈவு இரக்கமற்ற தாலிபான்களின் கொடூரச் செயல்'!
- தோண்ட தோண்ட வெளிவரும் சர்ச்சை வீடியோக்கள்!.. மீரா மிதுனின் சேனலைப் பார்த்து... சைபர் கிரைம் போலீஸ் யூடியூப் நிறுவனதுக்கு அவசர கடிதம்!
- "மாத்தி மாத்தி பேசுறாங்க"!.. போலீசாரையே சுத்தலில் விட்ட மீரா மிதுன்!.. புதிய யுக்தியை கையிலெடுத்த சைபர் கிரைம் காவல்துறை!
- மீரா மிதுனின் Boy friend-ஐயும் தூக்கிய போலீஸ்!.. தலைமறைவாக டூயட் பாடிய ஜோடி... தமிழ்நாடு காவல்துறையிடம் சிக்கியது எப்படி?.. யார் அந்த Boy friend?
- VIDEO: "சாப்பாடு கொடுக்கல... போலீஸ் அராஜகம் பண்றாங்க"!.. கூச்சலிட்ட மீரா மிதுன்!.. தரதரவென இழுத்து சென்ற போலீஸ்!.. என்ன நடந்தது?
- 'கொரோனா 3ம் அலை'... 'சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வார் ரூம்'... அதிரடி ஏற்பாடுகள்!
- சைரன் வச்ச "போலீஸ்" வண்டி!.. கமிஷனர்னு சொல்றாரு!.. ID cardல துணை ஆணையர்னு இருக்கு!.. கொத்தாக தூக்கிய போலீஸ்!.. திகில் பின்னணி!
- 'ஏடிஎம் கார்ட்... OTP... கிரெடிட் கார்ட்!'.. எதுவுமே தேவை இல்ல'!.. ஒரே ஒரு மெசேஜ்... லட்சக்கணக்கில் பணம் திருடியது எப்படி?.. சென்னையில் திகில் சம்பவம்!
- 'நடிகர் விஜய்யை சந்திக்க... குடும்பத்தோடு வந்த 'விஜய் மக்கள் இயக்க' முன்னாள் நிர்வாகி'!.. 'காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்ற போலீஸ்'!