"என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.. EPS-ஐ அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்குகிறேன்".. OPS பேட்டி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கட்சியிலிருந்து தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் எடப்பாடி பழச்சாமியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | இளைஞருக்கு ஏற்பட்ட மாதவிடாய்... அதிர்ந்துபோன டாக்டர்கள்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை..!

பொதுக்குழு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

அதேபோல, அதிமுக அமைப்பு விதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருக்கிணைப்பாளர் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என திருத்தம் செய்யப்பட்டது.

நீக்கம்

அதிமுக-விற்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது நீதிமன்றம் வரையில் சென்றது.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் அதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பார் எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகாரம் இல்லை

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஓபிஎஸ்,"அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்ட விதிமுறைகளின்படி, ஒன்றரைக்கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் என்னை கழக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். என்னை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் கழக சட்ட விதிகளுக்கு எதிராக, தன்னிச்சையாக செயல்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குகிறேன். தொண்டர்களின் துணையோடு சட்ட ரீதியில் சென்று நியாயத்தை பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியில் இருந்து OPS நீக்கம்!".. பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானம்..!

OPS, EPS, ADMK, AIDMK, AIDMK EXECUTIVE COUNCIL, OPS STATEMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்