"அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியில் இருந்து OPS நீக்கம்!".. பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Also Read | இலங்கை அதிபர் மாளிகைல இருந்த ரகசிய அறை.. கத்தை கத்தையா பணத்தை பார்த்து திகைச்சு போன போராட்டக்காரர்கள்..!
பொதுக்குழு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
அதேபோல, அதிமுக அமைப்பு விதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருக்கிணைப்பாளர் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என திருத்தம் செய்யப்பட்டது.
ஒற்றைத் தலைமை
அதிமுக-விற்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது நீதிமன்றம் வரையில் சென்றது.
இந்நிலையில், பொதுக்குழு நடத்தலாம் என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உடனேயே, சென்னை வானகரத்தில் பொதுக்குழு துவங்கியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தீர்மானம்
பொதுக்குழுவில், ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் அதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பார் எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்கிற திருத்தமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்துவந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.
Also Read | இளைஞருக்கு ஏற்பட்ட மாதவிடாய்... அதிர்ந்துபோன டாக்டர்கள்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வைகுண்டத்திற்கு வழி கேட்ட ஓபிஎஸ் – “எங்காளு கிட்ட கேளுங்க.. சிவலோகத்துக்கே வழிகாட்டுவார்” எ.வ. வேலு சொன்ன கலகல பதில்..!
- மன்னிக்கலாம்.. 'சசிகலா' பற்றி 'ஓபிஎஸ்' குட்டிக்கதை? 'அதிமுக'வில் சலசலப்பு!!
- தி.மு.க. அரசை விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம்.. பொருட்களின் விலை 3 மடங்கு உயர்வு என பட்டியல்
- அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வு
- இது பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சி.. ஓபிஎஸ் ஆவேசம்
- அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்!.. கோரஸ்-ஆக ஆதரவாளர்கள் முழங்கிய 'அந்த' வாசகம்!.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
- 'தனது குடும்பத்தோடு நடந்தே சென்று...' 'வாக்களித்த தமிழக முதல்வர்...' - மொதல்ல 'அந்த விசயத்த' பண்ணிட்டு தான் வாக்களிக்க கிளம்பியுள்ளார்...!
- 'குழந்தைக்கு பெயர் வைக்குமாறு...' 'முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த தொண்டர்...' மைக்ல 'அந்த' பெயர சொன்னப்போ... 'ஒரு நிமிஷம் அந்த இடமே அதிர்ந்து போற அளவுக்கு...' - ஆர்ப்பரித்த பொதுமக்கள்...!
- 'காமராஜர மெரினால அடக்கம் செய்யணும்னு கேட்டப்போ...' கருணாநிதி அப்போ என்ன சொன்னாரு தெரியுமா...? - தமிழக முதல்வர் விளக்கம்...!
- '234 தொகுதிகளிலும் நம்ம கூட்டணி தான் ஜெயிக்க போகுது...' 'அதிமுக ஆட்சியில் தான் ஏகப்பட்ட தொழில்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்திட்டு இருக்கு...' - தமிழக முதல்வர் பெருமிதம்...!