மதுரை கறி விருந்து.. 7000 ஆண்கள் பங்கேற்பு.. வெட்டப்பட்ட ஆடுகள் எவ்வளவு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆண்கள் மட்டுமே பங்குபெறும் அசைவ உணவுத் திருவிழா மதுரையில் வெகு விமர்சையாக நடந்தது. சுமார் 7 ஆயிரம் ஆண்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மதுரை கறி விருந்து.. 7000 ஆண்கள் பங்கேற்பு.. வெட்டப்பட்ட ஆடுகள் எவ்வளவு தெரியுமா?
Advertising
>
Advertising

மதுரை திருமங்கலம் அருகே அமைந்துள்ள கிராமம் அனுப்பபட்டி. இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் காவல் தெய்வமான கருப்பையா முத்தையா சாமி திருக்கோயிலில் மார்கழி திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

only men can participate in this non-veg food festival at madurai

அந்த மார்கழி திருவிழாவின் ஒரு நாளில் ஊரே சாப்பிடும்படி அசைவ கறி விருந்தும் விழாவும் நடைபெறும். இந்த கறி விருந்து விழாவில் என்ன விசேஷம் என்றால் இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று சாப்பிட முடியும். அனுப்பபட்டியைச் சுற்றி உள்ள சுமார் 10 கிராமங்களில் இருந்து ஆண்கள் வந்து இந்த கறி விருந்தில் பங்கேற்றுச் செல்வார்கள்.

இந்த ஆண்டு இந்த அசைவ கறி விருந்து விழா நேற்று புத்தாண்டு தினத்தில் நடைபெற்றது. அனுப்பபட்டியைச் சுற்றி அமைந்துள்ள கரடிக்கல், செக்கானூரணி, மேல உரப்பனூர் என 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றனர். கருப்பையா முத்தையா சாமிக்கு நேர்த்திக்கடன் படைத்த பின்னர் விருந்து பரிமாறப்பட்டது.

சுமார் 60 ஆடுகள் கருப்பையா முத்தையா கோயிலில் நேர்த்திக்கடனாக வெட்டப்பட்டு அசைவ விருந்து தயார் செய்யப்பட்டது. இந்த விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் ஒரு வழக்கமாக இருக்கிறது. இந்த விருந்தை சாப்பிட்டு முடித்த பின்னர் ஆண்கள் யாரும் தாங்கள் சாப்பிட்ட இலையை எடுக்கக்கூடாது.

சாப்பிட்டு முடித்து திருவிழா முடிந்த பின்னரும் இலையை யாரும் அப்புறப்படுத்தமாட்டார்கள். அந்த சாப்பாட்டு இலைகள் அனைத்தும் காய்ந்த பின்னர் அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து காய்ந்த இலைகள் அப்புறப்படுத்துவர். இதுதான் அந்த ஊரின் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த சுற்றுவட்டார கிராமத்தினரையும் தாண்டி பலரும் இந்த விநோத திருவிழாவில் பங்கேற்க விரும்பி வருவதும் உண்டு.

MADURAI, ஆண்கள் மட்டும், மதுரை, அசைவ உணவுத் திருவிழா, ONLY MEN, NON-VEG FOOD, FOOD FESTIVAL, கறி விருந்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்