'இந்த ஒரு நாள்' மட்டும்தான்.. அதுவும் ஒன்லி இந்த ஐட்டம்ஸ்தான்.. சிக்கிய 'வேற லெவல்' திருடர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக, வார இறுதிகளில் மட்டும் கேமரா, லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு  பொருட்கள் திருடு போனதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து இவ்வாறு, எழுந்த புகார்களின் அடிப்படையில், அங்கு போலீஸாரால் தனிப்படை அமைக்கப்பட்டது.

இப்படி ஒரு சூழ்நிலையில், திருப்புலாணி பகுதியில், ஒரு சனிக்கிழமை அன்று இரவு வேளையில் அரசி மண்டி ஒன்றை உடைத்து லேப்டாப் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்த புகார் ஒன்று மேலெழுந்தது. இதனை அடுத்து, அங்கு சிசிடிவி கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன. 

இதேபோல், கடந்த சனிக்கிழமை அதே நபர் திணைக்குளம் பகுதியில் செல்போன் திருடியதும் சிசிடிவியில் பதிவாகியது. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு போலீஸார் விசாரித்ததில், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் சென்று 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 

சின்னசேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன், அழகன்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன், முசிறியைச் சேர்ந்த லோகநாதன் என்கிற 3 பேருக்கும் திருச்சி சிறையில் நட்பு உண்டானதாகவும், கிழக்கரையில் வசிக்கும் மகேந்திரனின் உதவியுடன் சனிக்கிழமை இரவு மட்டும் திருப்புலாணி பகுதிகளில் மின்னணு சாதனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

RAMANATHAPURAM, THEFT, BURGLAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்