'அழகா இருந்தாங்க.. நான் போதையில் இருந்தேன்'.. உணவு டெலிவரி ஊழியரால் சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து பெண் ஒருவர் மடிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை 5 கிலோ மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்துள்ளார் நபர் ஒருவர்.
பிரபல உணவு நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக வேலைபார்க்கும் அவர், அப்பெண் தன் வீட்டுக்குள் நுழைந்தபோது, கூடவே சென்றுள்ளார். அதை கவனித்த அந்த பெண், யார் நீங்க? என கேட்க, உணவு டெலிவரி செய்ய வந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் தன் வீட்டில் இருந்து யாரும் உணவு ஆர்டர் பண்ணவில்லை என்று அப்பெண் கூறியுள்ளார். ஆனாலும் அந்த ஊழியர், உங்கள் வீட்டில் இருந்து யாராவது ஆர்டர் செய்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தபோது அப்பெண் சத்தம் போட்டுள்ளார்.
உடனே அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் அந்த நபரை போலீஸாரிடத்தில் பிடித்துக் கொடுத்தனர். விசாரணையில் அந்த நபர் வேளச்சேரி நேரு நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் 32 வயதான பிரசாந்த் என்று தெரியவந்தது. மேலும் அப்பெண் அழகாக இருந்ததாலும், தான் மது அருந்தியிருந்ததால் அப்பெண்ணிடம் பேச வேண்டும் என்கிற ஆசை உண்டானதாகவும் பிரசாந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மனைவிகிட்ட சொல்லிட்டுதான் போனார்!'.. சாதிமறுப்புத் திருமணம் செய்த 3 மாதத்தில்.. சென்னையில் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
- 'நைட் 2.30 மணிக்கு போன் வந்துச்சு'.. 'பெண் என்ஜினியரின் வங்கிக் கணக்கில்' இருந்து லட்சக்கணக்கில் 'அபேஸ்' செய்த கும்பல்!
- ‘பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கி சூடு’!.. தப்பி ஓடிய நண்பர்கள்..! தாம்பரம் அருகே பரபரப்பு..!
- ‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..
- 'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்!
- 'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'! ... ‘சென்னையில் பரபரப்பு’!
- 'அடுத்த 2 நாட்கள்'... 'எங்கெல்லாம் மழை'... 'வானிலை மையம் தகவல்!
- 'கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்'... ‘அதுக்குள்ள நொடியில்’... ‘இளம்ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'காதலித்து திருமணம் செய்த இளம்பெண்'... '3 ஆண்டுகளில் நடந்த சோகம்'