‘10 டன் வெங்காயம்’! ‘திடீரென குறுக்கே வந்த பன்றிகள்’.. ‘சடன் பிரேக் போட்ட டிரைவர்’.. சென்னை அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயம்பேடு மார்கெட்டுக்கு வெங்காயம் ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

ஆந்திராவில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 10 டன் வெங்காய மூட்டைகளுட்ன் லாரி ஒன்று வந்துள்ளது. லாரி திருவள்ளூர் பழைய டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே பன்றிகள் வந்துள்ளது. அதனால் லாரி டிரைவர் வேகமாக ப்ரேக் பிடித்துள்ளார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் லாரி டிரைவரும், உடன் இருந்தவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். இதனை அடுத்து மற்றொரு லாரியின் மூலம் வெங்காய மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டது.

ACCIDENT, CHENNAI, TRUCK, ONION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்