வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம்மீது லத்தியை வீசியதால், இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை சிம்மக்கல் பகுதியில் டயர் வியாபாரம் செய்துவருகிறார் விவேகானந்தகுமார். இவரும், இவரது கடையில் வேலை செய்யும் சரவணக்குமார் என்பவரும், கடந்த சனிக்கிழமையன்று சிம்மக்கல் எம்.ஜி.ஆர் பாலத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செல்லூர் போலீசார், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால் இருவரும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதையடுத்து, அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின்மீது போலீசார் லத்தியை வீசியதாகத் தெரிகிறது. இதனால், விவேகானந்த குமாரும், அவர் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த விவேகானந்தகுமாரின் உறவினர்கள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த விவேகானந்த குமாருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியப் பெண்'... 'அதிர்ந்த பயணிகள்'!
- ‘காவல் நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை..’ மதுரையில் நடந்த பயங்கரம்..
- 'மோதலில் ஈடுபட்டதாக திருநங்கைகள் மீது கொடூரத் தாக்குதல்'... அதிர்ச்சி வீடியோ!
- 'என் தங்கச்சியவா லவ் பண்ற?'... 'கத்தியால் குத்திய கும்பல்'... நடுரோட்டில் 'நெஞ்சை பதறவைத்த' சம்பவம்!
- 'பேருந்தில் இளம்பெண்களுக்கு நடந்த கொடூரம்'... 'முத்தமிடக்கோரி அடித்து உதைத்த கும்பல்'!
- ‘அவனுக்கு நீச்சல் தெரியும் அப்றம் எப்டி இது நடந்தது’.. 6 மணி நேரம் பப்ஜி விளையாடிய மகனுக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர் கதறல்!
- பிளக்கும் வெயில்.. ‘ஸ்பெஷல் சர்வீஸ்’ கொடுக்கும் ‘கவர்மெண்ட் பஸ் கண்டக்டர்’.. நெகிழும் பயணிகள்!
- 'கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த மனைவியால் பரபரப்பு'!
- ‘கார் கதவு ‘லாக்’ ஆனதால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்’!.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
- 'மகளின் திருமணநிகழ்ச்சியில் உற்சாகமாக பாடிய எஸ்.ஐ.'... 'மேடையிலேயே மயங்கி விழுந்து பலியான சோகம்'!