"நான் பட்டபாடு இருக்கே".. குடி பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்.. பலரையும் கவர்ந்த சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அவ்வப்போது இணையத்தில் நடக்கும் வினோதமாக அல்லது இயல்பாக நடைபெறும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடக்கும் போது அவை இணையவாசிகள் கவனம் பெற்று பெரிய அளவில் வைரல் ஆகவும் செய்யும்.
Images are subject to © copyright to their respective owners.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அடித்துள்ள போஸ்டர் தொடர்பான செய்தி தற்போது அதிக கவனம் பெற்று பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள பக்தவத்சலம் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது. முன்னதாக 32 ஆண்டுகளாக குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்த மனோகரன், அதனை கைவிட வேண்டும் என முடிவு எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக உறுதியுடன் இருந்து கடந்த ஒரு வருடமாக மதுவைத் தொடாமலும் மனோகரன் இருந்து வந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று மது பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்ட மனோகரன், தான் இதனை கைவிட்டு ஒரு வருடமாகி உள்ள சூழலில் அதற்காக போஸ்டர் எல்லாம் ஒட்டி ஊர் எல்லாம் கொண்டாடிய செய்தி தான், தற்போது இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் ஒரு உபயதாரர் மூலம் இந்த போஸ்டரை அவர் ஊர் எங்கும் ஒட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. தனது குடி பழக்கம் காரணமாக ஊர் மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் சொந்த வீட்டிலும் கூட மரியாதையை அவர் இழந்திருந்ததாக தெரிகிறது. ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை மது அருந்தவும் மனோகரன் செலவிட்டு வந்துள்ளார்.
அதன் காரணமாக, வீட்டு மனையை கூட விற்க நேரிட்டதாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், இதனால் நொந்து போன மனோகரன், தற்போது மது பழக்கத்தை கைவிட்டுள்ள சூழலால் ஊரிலும் அவருக்கு மரியாதை கூடி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, அவரது உடல் நலமும் சீராக இருப்பதாகவும் மனோகரன் குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் ஒட்டிய போஸ்டர்கள் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
மேலும் அவரது போஸ்டரில் "மனோகரன் குடியை மறந்து முதலாம் ஆண்டு தினம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மகள்.. வேதனையில் இறந்த தந்தை.. "இப்ப அம்மாவும்".. மனம் நொறுங்க வைக்கும் சம்பவம்!!
Also Read | திருமண நாளில் உயிரிழந்த மணப்பெண்.. பெரும் துயரத்திலும் கனத்த இதயத்துடன் நடத்திய கல்யாணம்..!
மற்ற செய்திகள்