ஐயோ, பஸ் முன்னாடி என்ன போகுதுன்னு பாருங்க.. பதறிய பயணிகள்.. டிரைவர் எடுத்த ரிஸ்க்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் ஒன்று மட்டும் தனியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தனியாக கழன்று பேருந்தின் முன்பக்கம் ஓடிய சக்கரம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் கள்ளகிணறு அருகே அரசு பேருந்து ஒன்று  திருநெல்வேலியிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்த்தின் சக்கரம் மட்டும் திடீரென பேருந்தில் இருந்து கழன்று தனியாக பேருந்துக்கு முன் பாய்ந்தது.

கடும் அதிர்ச்சியடைந்த பயணிகள்:

அப்போது உடனடியாக ஓட்டுநர்  தன்னுடைய பேருந்தின் சக்கரம் தான் என சுதாரித்து கொண்டார். மேலும், இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கத்தி கூப்பாடு போட்டுள்ளனர். பேருந்தில் இருந்து பிரிந்து தனியே சென்ற சக்கரம் சுமார் அரை மைல் தொலைவு வரை சென்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தது.

அரசு போக்குவரத்து கழகத்திற்கு தகவல்:

சக்கரம் தனியாக கழன்று ஓடியதை கண்ட பேருந்து ஓட்டுனர் காமராஜ் சமயோஜிதமாக யோசித்து ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். அந்த நேரம் பயணிகள் நெஞ்சை பிடித்துக்கொண்டு இருந்தனர். வண்டியை நிறுத்திய பின்பு தான் ஆசுவாசமடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நடுவழியில் சிக்கித் தவித்த 47 பயணிகள்:

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடுவழியில் சிக்கித் தவித்த 47 பயணிகளையும் மாற்று பேருந்து மூலம் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பாதி வழியில் விபத்தாகி நின்ற பேருந்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். ஹாலிவுட் படங்களில் வருவது போல நடந்த இந்த சாகச சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

WHEEL, TIRUPUR, BUS, பஸ், சக்கரம், திருப்பூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்