1. இந்தியாவால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! 2. இந்தியாவில் 60% கொரோனா பாதிப்பு நோயாளிகள் இந்த 5 மாநிலங்கள் சேர்ந்தவர்கள்தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. இந்தியா எங்களுடன் இருநாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட மறுத்து வருவதால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தன் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரேனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50-க்கு கீழே இருந்த நிலையில் இன்று 50-க்கு மேல் உயர்ந்துள்ளது.

3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் நூறு நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4. ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79 சதவீதம் அளவிற்கு குறைந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

5. பூந்தமல்லியில் வசிக்கும் தனியார் நிறுவன மேலாளர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் அவரது நண்பருக்கும் தொற்று அறிகுறி உள்ளது.

6. இந்தியாவில் சோதனையில் 24 பேருக்கு ஒருவருக்கே கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது என இந்திய மருத்துவ கவுன்சில் கூறி உள்ளது.

7. இந்தியாவின் கேரள மாநிலத்தில் நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை காண 3 நாளில் 2,700 கி.மீ காரில் பயணம் செய்துள்ளார் தாயார் ஒருவர்.

8. ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

9. கொரோனா வைரஸ் பாதிப்புகள் மராட்டியம், டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களுடன் ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசமும் சேர்ந்து, 5 மாநிலங்களில் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

10. 53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்