'மறக்காம ஓட்டு போட வாங்க'...'சூப்பர் ஆஃபர அள்ளிட்டு போங்க'...தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தேர்தல் ஆணையமும் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.பல்வேறு பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு காட்சிகளில் பேசி வருகிறார்கள்.
இதனிடையே தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும் மக்களை வாக்களிப்பதற்கு ஊக்குவிப்பதற்காக தங்களால் ஆன முயற்சியினை எடுத்துள்ளது.அதன்படி வரும் 18ஆம் தேதி தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுகொள்ளலாம் என அறிவித்துள்ளது.இந்த தள்ளுபடியை மக்கள் தங்களில் கை விரலில் உள்ள மை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த தள்ளுபடி சலுகை சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட முன்னனி ஓட்டல்களிலும் செல்லும். மேலும் இந்தத் தள்ளுபடி சலுகையை மக்கள் மாலை 6 மணிக்கு பிறகு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நதிகள் இணைப்பு: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி.. நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!
- 'ராகுல் அப்படி பேசினது அயோக்கியத் தனம்.. வயநாடுக்கு ஓடிவந்தவரு'.. பாஜக வேட்பாளர் எச்.ராஜா! பிரத்யேக பேட்டி!
- ‘ஜல்லிக்கட்டுக்கு வந்த இளைஞர்கள் இந்த தேர்தலில் இத செய்யணும்’.. திருமுருகன் காந்தி ஆவேசம்!
- 'செல்ஃபி எடுக்க முயற்சித்த தொண்டர்'...'அன்புமணியின் ரியாக்ஷன்'...வைரலாகும் வீடியோ!
- 'யாருமே ஓட்டு கேட்டு வர்ல!'... ஒவ்வொரு வாக்கும் முக்கியமாக இருக்கும்போது இப்படி ஒரு கிராமமா?
- 'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?
- ‘தேர்தல் டியூட்டி பயிற்சி’ வகுப்பின்போது நெஞ்சுவலியால் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!
- அரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா?
- அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பிடித்த ஃபேவரைட் குடும்பம் இதுதான்.. ஏன் தெரியுமா?
- தேர்தல் 2019: முதல் ஓட்டுப் போட்டது யார்? எந்த மாநிலத்தில் பதிவானது தெரியுமா?