‘அச்சுறுத்தும் ஓமிக்ரோன்’.. இந்த விஷயங்களை கரெட்டா பாலோ பண்ணா பரவலை கட்டுப்படுத்திடலாம்.. சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஓமிக்ரோன் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் இருக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

Advertising
>
Advertising

கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரோன் என்ற புதிய வகை உருமாறிய கொரானா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு பேருக்கு முதன்முதலாக ஓமிக்ரோன் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஓமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தடுப்பூசியை செலுத்தத் தவறியவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிசன் படுக்கைகளை, ஐசியு படுக்கைகள் ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு டேஸ் தடுப்பூசி, சமூக இடைவெளி, கைகளை கழுவுதல், கட்டாயம் முகக்கவசம் அளிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது பதட்டமான சூழ்நிலை இல்லை என்றும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தொற்று பரவலை கட்டுப்படுத்தி விட முடியும் என்றும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்