நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வரப்போகுது புதிய அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மருத்துவ உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Advertising
>
Advertising

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டங்கள் தோறும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகரித்தல் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போன்று தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

MKSTALIN, CORONA, OMICRON, NIGHTCURFEW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்