'குழந்தைக்கு உடனே ஆபரேஷன் செய்யணும்'... 'ஆனா உன்னோட மனசு யாருக்கும் வராதுமா'... யாரும் செய்ய துணியாத காரியத்தை செய்த ஒலிம்பிக் வீராங்கனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தைத் தட்டி சென்றார். இந்நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த 8 மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தம்பதியர் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

இதனை பேஸ்புக் மூலம் பதிவிட்ட அந்த தம்பதியர், நிதி கேட்டு பலருக்கும் கோரிக்கை விடுத்தார்கள். தம்பதியரின் இந்த கோரிக்கை  மரியாவின் பார்வைக்கு வந்தது. இதனால் மனம் உருகிய மரியா, அந்த குழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அந்த வகையில் யாரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்ய முன்வந்தார்.

ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 வாரத்திற்குள்ளே தனது வாழ்நாள் கனவாகக் கைப்பற்றிய வெள்ளிப் பதக்கத்தை மரியா ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட்டார். அதனை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது. அந்தப் பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து பலரையும் நெகிழ வைத்தார்.

இதற்கிடையே மரியாவின் இந்த செயலை அறிந்த பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம், மரியாவின் பரந்த மனதைப் பாராட்டி இருப்பதுடன் அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் வெளிவந்த நிலையில் பலரும் மரியாவை பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்