‘யோகாவில் சாதனை’... ‘பத்மஸ்ரீ விருது பெற்ற’... 'நானம்மாள் பாட்டி காலமானார்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்யோகாவில் பல்வேறு சாதனைகள் புரிந்து பத்மஸ்ரீ விருது பெற்ற நானம்மாள் பாட்டி காலமானார். அவருக்கு வயது 99.
கோவை கணபதி அத்திபாளையத்தில் வசித்து வந்தவர், வயதான யோகா ஆசிரியரான நானம்மாள். இவர், கடந்த 1920-ம் ஆண்டு, பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில், வேளாண்மை குடும்பத்தில் பிறந்தவர். இவரின் குடும்பமே யோகாவை கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால், எட்டு வயது முதலே இவரும் யோகாவை கற்று செய்து வந்தார். 90 ஆண்டுகளுக்கும் மேலாக யோகாவையே தனது மூச்சாக சுவாசித்துக் கொண்டிருந்தார், நானம்மாள்.
லட்சக்கணக்கான பேருக்கு, யோகாவை கற்றுத் தந்து, பல நூறுக்கும் மேற்பட்டவர்களை யோகா ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளார். இவரது பிள்ளைகளும், யோகா கற்று பயிற்சி மையம் நடத்தி வருகின்றனர். முதிய வயதிலும் யோகாவில் சாதித்து வந்த நானம்மாளுக்கு, கடந்த 2016-ம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் ‘நாரிசக்தி’ விருது மற்றும் 2017-ம் ஆண்டில் ’யோகா ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது.
‘யோகா பாட்டி’ என்ற பெயரில் வலம் வந்த நானம்மாளுக்கு, கடந்த 2018-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. கடந்த வாரம், கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நானம்மாள் காலமானார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கண் முன்னே தீயில் கருகிய தாய்'.. '7 வயதில் இருந்து வன்கொடுமை'... தடைகளைத் தகர்த்த நடாஷாவின் சாதனை!
- ‘காரில் சென்றபோது’... ‘ஒரு நொடியில்’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்’!
- 'சிறுக சிறுக சேத்தேன் சாமி'...'எலி மொத்தமா நாசம் பண்ணிடுச்சு'...கோவையில் நடந்த சோகம்!
- ‘திடீரென இறந்த கணவரால் நிகழ்ந்த சோகம்’... ‘குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தப் பெண்’... 'செய்த காரியத்தால்'... 'உறைந்துபோன குடும்பம்'!
- ‘மேய்ச்சலுக்கு வந்த யானை’.. ‘எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம்’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!
- ‘இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி’.. ‘அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தப்பிய மகன்’.. கோவையில் பரபரப்பு..!
- 'இனிமே எல்லாம் இப்படித்தான்'... திருப்பூர் கலெக்டர் அதிரடி!'.. 'குவியும் பாராட்டுக்கள்!
- 'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே!
- 'என்னடா 10 ரூவா கொடுக்குற'...'கொள்ளையடிக்க புது டெக்னிக்'...கோவையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 4-ம் வகுப்பு மாணவிக்கு சக மாணவர்களால் நடந்த கொடுமை..! கோவையில் பரபரப்பு..!