‘ஆறு பிள்ளைகள் இருந்தும்’... ‘கண் கலங்கி நின்ற கணவர்’... ‘கைகோர்த்து துணிச்சல் முடிவு எடுத்தப் பெண்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

6 பிள்ளைகள் இருந்தும், அநாதையாக நிற்க வைத்ததால் ஓய்வெடுக்க வேண்டிய வயதில், ஓயாமல் உழைக்கும் இந்த தம்பதியின் கண்ணீர் கதை மனதை புரட்டி போட்டுள்ளது.

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி (80) - சுசீலா (65) தம்பதி. இவர்களுக்கு 4 ஆண் 2 பெண் என மொத்தம் 6 பிள்ளைகள். ஒரே ஒரு மகனை தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகளுடன் தனித் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அந்தக் காலத்திலேயே எஸ்.எஸ்.எல்.சி படித்த சுசீலா, பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் அவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலும் எந்த வேலைக்கும் செல்லவில்லை.

ஆனால், இப்போது கால சூழ்நிலையில் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பதாக கண்ணீருடன் கூறியுள்ளார். மொத்த மிட்டாய் வியாபராம் செய்து, அதில் வந்த வருமானத்தை வைத்து, பிள்ளைகளை படிக்க வைத்து கல்யாணமும் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு, வயதானதால் சரியாக காது கேட்காத கணவரையும், காலில் எலும்பு நகர்ந்து அறுவை சிகிக்சை மேற்கொண்ட தன்னை கவனிக்க பிள்ளைகள் தயார் நிலையில் இல்லாததால், கண்கள் கலங்கி நின்ற கணவரை குழந்தையாக பாவித்து, தஞ்சை கோயில் முன்பு கடலை மிட்டாய் வியாபாராத்துக்கு கணவருடன் கைகோர்த்து வந்துவிட்டதாக சுசீலா கூறியுள்ளார். 

தன்னுடைய கணவரை கண்ணீர் வடிக்க விட மாட்டேன் என சுசீலா நம்பிக்கை கொண்டுள்ளார். தன்னோட ஒடிந்த தேகத்தைப் பார்த்து சிலர் கடலை மிட்டாய் வாங்காமலேயே காசு தந்தாலும், அவர்களிடம், யாருகிட்டேயும் சும்மா கை நீட்டி ஒத்த பைசா வாங்கக் கூடாது என்று பிள்ளைகள் கைவிட்டாலும், நம்பிக்கை எங்களை விடவில்லை என மறுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் முகம் முழுக்க புன்னகையுடன் கூடுதலாக இரண்டு பாக்கெட் வாங்கிச் செல்வார்கள் என்றும் சுசீலா கூறியுள்ளார்.

வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்றதும் என் கணவர் எனக்கு கால் அமுக்கி விடுவார். அவருக்கு நான் தலை கோதி விடுவேன். இப்படியாக ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகச் சென்றாலும் பிள்ளைகள் அருகில் இல்லையே என ஒரு வகையான வேதனை தொலைத்தெடுக்கும் என்று வருத்தத்துடன் சுசீலா கூறியுள்ளார்.

THANJAVURBIGTEMPLE, COUPLE, HUSBANDANDWIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்