'கால் தவறி விழுந்த மூதாட்டி'... 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'அரசுப் பேருந்தால் நிகழ்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கால் தவறி விழுந்த மூதாட்டி, அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், திருவொற்றியூர் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து, வெளியே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு, சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், நிறைய பைகளுடன்,  பேருந்து நடைமேடை படிக்கட்டு வழியாக இறங்கினார். இதில் திடீரென கால் தடுமாறி படிக்கட்டிலிருந்து விழ, அவரை தூக்க இரண்டு பேர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் மூதாட்டி மீது அரசுப் பேருந்து ஏறியது. இதனால் காப்பாற்றப் போனவர்கள், அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

பேருந்து ஏறியதில், சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இறந்துபோன மூதாட்டி யார் என்பது குறித்த விசாரணை நடைப்பெற்று வருகின்றது. இதற்கிடையில், விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனை (45) போலீசார், கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ACCIDENT, DIED, WOMAN, CHENNAI, GOVERNMENT, BUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்