ப்பா...நூறு ஆயுசு.. மழையால் முறிந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பித்த வாகன ஒட்டி.. திக்..திக்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொரட்டூர் பகுதியில் பழமையான மரம் ஒன்று மழையால் முறிந்து விழும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ப்பா...நூறு ஆயுசு.. மழையால் முறிந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பித்த வாகன ஒட்டி.. திக்..திக்.. வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | மண்டை பத்திரம்.. 8 KG எடைகொண்ட‌ 'கருங்கல்' ஹெல்மெட்.. முரட்டு ஐடியாவே இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் நவம்பர் 6 ஆம் தேதிவரையில் கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Old Tree falls in Chennai due to Heavy rain video

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு காற்றின் தீவிரம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டும் அல்லாது காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தலைநகரான சென்னையில் நேற்று முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கொரட்டூர், எழும்பூர், வேப்பேரி, பெரிமேடு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடித்தது. இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் மழையால் பழமையான மரம் ஒன்று முறிந்து விழும் சிசிடிவி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சாலையில் மக்கள் பரபரப்புடன் சென்று கொண்டிருக்க, ஓரத்தில் இருந்த மரம் மெல்ல தணிந்து நிற்கிறது. அப்போது இருசக்கர வாகனவோட்டி ஒருவர் அந்த இடத்தை கடக்கிறார். சரியாக அவர் மரத்தை கடந்த அடுத்த வினாடியில் மரம் முறிந்து சாலையில் விழுகிறது. இதனால், அந்த வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு..!

HEAVYRAIN, CHENNAI, OLD TREE FALLS IN CHENNAI, WEATHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்