இன்னாள் மாணவருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்! நெகிழும் ஓட்டப்பந்தய வீரர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தயாராகி வரும் ஏழை மாணவருக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் உதவியுள்ளனர்.
கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் அரவிந்தராஜ். இவர் 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஊரக விளையாட்டு போட்டியில் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக வரும் மே மாதம் 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் டேராடூனில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில், ஏழ்மை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அரவிந்தராஜ் பங்கேற்க முடியாத சூழலை அறிந்த ஒத்தக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அரவிந்தராஜ்க்கு தேவையான விளையாட்டு சீருடைகள், ஷூ, பயிற்சியாளர் மற்றும் சத்தான உணவுகளை வாங்கி கொடுக்க முன்வந்துள்ளனர்.
மேலும், ஒத்தக்கால் அரசுப் பள்ளி சார்பில் அவர் டேராடூன் சென்று வர போக்குவரத்துக்கு தேவையான அனைத்து செலவையும் பள்ளி நிர்வாகம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் மாணவர்கள் இதேபோல் ஒவ்வொருவரும் தாங்கள் பயின்ற பள்ளியில் பயிலும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு தங்களால் இயன்ற உதவியை வழங்க முன்னாள் மாணவர்கள் முன்வந்தால் பலரும் பயன்பெறுவார்கள் என்று கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரபல நிதி நிறுவனத்தில் 813 சவரன் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் வேற யாரும் அல்ல’.. அதிரும் திருப்பம்!
- 'சேலையை கட்டி கொண்டு தற்கொலை செய்த மாணவர்'...அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்!
- 'நீ யாருக்கும் கிடைக்க கூடாது'...'பொள்ளாச்சி மாணவி' கொலையில்...அதிரவைக்கும் காரணம்!
- கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை... பயிற்சியாளரின் மகன் கைது...!
- 'சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டான்'...'எங்க கிட்ட விடுங்க சார் இவன'...வைரலாகும் வீடியோ!
- கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...
- 'என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு'...அதிரவைக்கும் சிறுமியின்'...'பிரேத பரிசோதனை அறிக்கை'!
- 'அதிர்ச்சியில் உறைய வைக்கும்'...'கோவை சிறுமி'யின் பிரேத பரிசோதனை அறிக்கை'...கொந்தளித்த மக்கள்!
- ‘கை, கால்கள் கட்டப்பட்டு, பரிதாப நிலையில் 5 வயது சிறுமியின் சடலம்’.. பதற வைக்கும் கொடூர சம்பவம்!
- ’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்!