'அறுவை சிகிச்சை எல்லாம் தேவையில்லை'... 'ஒரு சட்டி பழைய சோறு போதும்'... அசத்தும் சென்னை அரசு மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குடல் அயற்சி தற்போது பரவலாக 100ல் 30 பேருக்கு காணப்படுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியா நமது உடலின் ஆரோகியத்துக்கு தேவைப்படுகிறது.
விட்டமின் கே, விட்டமின் பி 12 ஆகியவை தயாரிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீர்படுத்தும் தன்மை கொண்டவை அந்த பாக்டீரியாக்கள்.
ஆண்டி பயாடிக் பயன்பாடு, குடல் புழு, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட உணவு உட்கொள்ளுதல் ஆகியவை காரணமாக இந்த பாக்டீரியாக்கள் அழிந்து போகலாம். இதனால் வயிற்றுப்போக்கு முதல் தீவிர வயிறு வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படக் கூடும். ஆங்கில மருந்துகள் முதல் அறுவை சிகிச்சை வரை நோயின் தீவிரம் பொருத்து செய்யப்படும்.
குடல் சம்பந்தமான இந்த கோளாறுகளுக்கு பழைய சோறு பேருதவியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைதுறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார். நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துடன் சேர்த்து பழைய சோறும் கொடுப்பதால் நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவர் தெரிவிக்கிறார்.
பழைய சோறு சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாவை எடுத்துக் கொள்ளும். அவைதான் உடலுக்கு தேவை. மண் பானையில் பழைய சோறு செய்தால் நல்ல பலன் கொடுக்கும். கடந்த நான்கு வருடங்களாக அல்சர் என வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை.
இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க மூன்று ஆண்டு கால ஆய்வு 2.7 கோடி ரூபாய் செலவில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நோயாளிகள் மட்டுமல்லாமல் துறையில் உள்ள மருத்துவர்களும் பழைய சோறு சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தானும் தன் குடும்பத்தினரும் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வருவதாக மருத்துவர் அமுதன் கூறுகிறார். தன் மனைவிக்கு ஏற்பட்ட குடல் அயற்சி சீராகியிருப்பதாகவும், தனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும், பழைய சோற்றில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் கருவி கொண்டு இந்த ஆய்வு மார்ச் மாதம் முதல் நடத்தப்படும். கடல் பகுதி, மருத்துவமனை, கிராமப்புறம் என வெவ்வேறு இடங்களில் பழைய சோறு தயாரிக்கும் போது பாக்டீரியா அளவு எவ்வளவு இருக்கும் என கணக்கிடப்படும்.
வெவ்வேறு வகைவகை அரிசி பயன்படுத்தப்பட்டு அதன் விளைவுகளும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்!.. "மனிதர்களுக்கு பரவலாம்!".. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து!.. தமிழகத்தின் நிலை என்ன?
- “தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி... வெகு விரைவில் துவங்க இருக்கிறது தமிழக அரசு..!” - ஊசி போடும் ‘தேதியுடன்’ விவரங்களை அறிவித்த சுகாதாரத்துறை!!
- ரஜினியின் உடல்நிலை குறித்து... இணையத்தில் அதிகமாக பகிரப்படும்... அப்பலோ மருத்துவமனையின் முக்கிய அறிக்கை!!
- ‘நல்லது, கெட்டது’.. ‘ரெண்டு பக்கத்தையும் காட்டிய கொரோனா’... ‘இதுக்கு அப்புறம்’... ‘உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சியான தகவல்’...!!!
- ‘கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும்’... ‘இவங்களுக்குத்தான் முதல்கட்டமாக வழங்க திட்டம்’... ‘தீவிரமாக தயாராகும் பணிகள்’... ‘வெளியான தகவல்’...!!!
- “சாதி பெயரை ஏன் நீக்கணும்? மாட்டேன்.. அது என் அடையாளம்.. வரலாறு” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள தமிழக பெண் ‘பரபரப்பு’ பதில்!
- 'கொரோனாவுல இருந்து மீண்டு வந்தவங்க... இனிமே தான் கவனமா இருக்கணும்'... உலகப் புகழ் பெற்ற 'தி லான்சட்' மருத்துவ இதழில்... வெளியான அதிர்ச்சி தகவல்!
- டிரம்புக்கு ஆபத்தா?.. 'அபாய கட்டத்தில் இருந்து மீளவில்லை!'.. மருத்துவர்கள் பகீர் கருத்து!.. அமெரிக்காவில் பரபரப்பு!
- "ஆத்தி,, இத எல்லாம் 'எப்படியா' முழுங்குறீங்க??"... ஆணின் வயிற்றை சோதனை செய்த டாக்டருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'... உடனடியாக நடத்த 'சர்ஜரி'!!!
- 'அந்த பொண்ணுக்கு 20 வயசு தான் ஆகுது!.. கருப்பையை ஸ்கேன் செய்த போது... '6 கிலோ'ல அத பார்த்து... அதிர்ந்து போன மருத்துவர்கள்'!.. மகத்தான அறிவியல் போராட்டம்!